இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நீடித்து வந்ததால், உயிர் பிழைக்கவும், வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரி வருகிறார்கள்.

இதற்கு முதல்படியாக, கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் வந்த, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கருணையுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் நமது இலங்கை தமிழ் சொந்தங்கள், இனி சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

இதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் தமிழக மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com