

புதுடெல்லி,
இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு இடையில் தூய்மைக்கான போட்டி நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகளை வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தூய்மையான நகரங்கள் குறித்த போட்டி முடிவுகளை வெளியிட்டு வெற்றியாளர்களை பாராட்டினார். இதில் சென்னை மாநகராட்சிக்கு மாநில தலைநகரங்களில் சிறந்த முன்னோடி முயற்சி நகரத்திற்கான விருது வழங்கப்பட்டது.
இதே போல மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு, 25 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை பிரிவில், தென்னிந்தியாவின் சிறந்த தனித்திறன் செயல்பாடு நகரம் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை தமிழக அரசின் சார்பில் முன்னாள் செயல் அலுவலர் கு.குகன் மற்றும் தற்போதைய செயல் அலுவலர் ஜெ. பிரகாஷ் இருவறும் பெற்றுக் கொண்டனர்.