விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு

விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமானம்
Published on

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில்மத்திய மந்திரிசபை கூட்டமும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்தி ரிசபை குழு கூட்டமும் நடைபெற்றது. இதில் பல முக்கிய ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.இந்த ஒப்புதல்கள் பற்றி ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ் ணவ் நிருபர்களுக்கு விளக்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளில் விமான எரிபொருள் விலையை நிலைப்படுத்தும் ஆதரவை வழங்குவதற்காக, எண்ணெய் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடிக்கு மிகாத ஒரு முறை நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நிதி உதவியானது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு அமைச்சகத்தின் மானிய கோரிக்கைகள் மூலம் எண் ணெய் நிறுவனங்களுக்கு வட்டியில்லா முன்பணமாக வழங்கப்படும்.

பழைய வாகனங்கள் கழிப்பு

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காற்று மாசுபாட்டை குறைப்பதையும், தூய்மையான போக்குவரத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்ட பழைய வாகனங் களை கழிக்கும் 2 ஆண்டு திட்டத்துக்கும் மந்திரிசபை ஒப்பு தல் அளித்துள்ளது.இத்திட்டத்துக்கு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தலைநகர் பிராந்திய திட் டமிடல் வாரியம் நிதி அளிக்கும். சாலைப்போக்குவரத்து மற் றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவை டெல்லி, அரி யானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தும்.

மின்சார வாகனங்கள்

மத்திய அரசிடம் இருந்து ரூ.5,041 கோடியும், பங்கேற்கும் மாநிலங்களிடம் இருந்து ரூ.1,601 கோடி வரிச்சலுகைகள் உள் பட ரூ.9,585 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத் தப்படும் இத்திட்டம் பி.எஸ்.-4 மற்றும் அதற்கு முந்தைய லாரி கள் மற்றும் பஸ்களுக்கு பதிலாக புதிய மின்சார வாகனங் களை வாங்க ஊக்குவிக்கிறது.

சாலைப்பணிகள்

பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபைக்குழு, மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஹிவர் கேடி - ரோஷ்னி - ஆஷாபூர் - ரூதி பிரிவில் (125.01 கி.மீ.) தற்போதுள்ள இடைநிலைச்சாலையை, 2 வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கும், அதே சாலையின் தேஷ்காவ்ன் -ஜுல்வானியா பிரிவில் (108.643 கி.மீ.) தற்போதுள்ள 2 வழிச் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கும், கலப் பின ஆண்டுத்தொகை முறையில் ரூ.4,415.60 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோல தேசிய நெடுஞ்சாலை-63-ல் தற்போதுள்ள ஆர் மூர்-ஜக்தியால்-மஞ்சேரியல் பகுதியை 'ஹைபிரிடு அன்யூட்டி மாடல்' முறையிலும், தேசிய நெடுஞ்சாலை -563-ன் ஜக்தி யால்-கரீம்நகர் பகுதியை 'பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்பர் டோல்' முறையிலும், 190.76 கி.மீ. மொத்த நீளம் மற்றும் ரூ.7597.16 கோடி மொத்த மூலதன செலவில் 3 பணித்தொகுப்புகளின் கீழ் 4 வழிச்சாலையாக அகலப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com