'ஜல் ஜீவன்' திட்டப் பணிகளை ஆய்வு செய்ய 100 குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு


ஜல் ஜீவன் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய 100 குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு
x

‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி,

மத்திய அரசு நாடு முழுவதும் ஜல் ஜீவன் எனும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த திட்டத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதிகளில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், பல கிராமப்புறங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் ஜல்ஜீவன் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய 100 குழுக்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த குழுவில் மத்திய அரசின் பல்வேறு துறை செயலாளர்கள், இணை செயலாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மத்திய பிரதேசத்தில் 27 திட்டங்கள் மதிப்பீடு செய்ய உள்ளனர், ராஜஸ்தானில்-21, உத்தரப்பிரதேசத்தில்-18 மற்றும் கர்நாடகாவில்-16 திட்டங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து ஒடிசா, குஜராத், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஆந்திரா, ஜார்கண்ட், பஞ்சாப், சிக்கிம், மேகாலயா, சத்தீஷ்கார் மற்றும் கோவா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் மத்திய குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளன.

1 More update

Next Story