மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாதத்துக்கு ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்வு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது மாற்றுப்பணிக்கான படியாக (டெபுடேஷன் அலவன்ஸ்), ஒரே ஊருக்குள் பணிக்கு செல்வதாக இருந்தால், அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் என்ற வீதத்தில், மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்சவரம்புடன் வழங்கப்படுகிறது.

வேறு ஊருக்கு மாற்றுப்பணியாக சென்றால், அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் என்ற வீதத்தில் மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் என்ற உச்சவரம்புடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான மாற்றுப்பணி படியை மத்திய அரசு 2 மடங்கு உயர்த்தி உள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில் இது கூறப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரே ஊருக்குள் மாற்றுப்பணி செல்வதாக இருந்தால், உச்சவரம்பாக ரூ.4,500 வரை வழங்கப்படும். வெளியூருக்கு செல்வதாக இருந்தால், உச்சவரம்பாக ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும்.

மேலும், அகவிலைப்படி 50 சதவீதம் உயரும்போதெல்லாம், இந்த உச்சவரம்பு 25 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com