

புதுடெல்லி,
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. 7வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்கள், துறைகள் அவற்றுடன் இணைந்த கீழ்நிலை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
இருப்பினும், அமைச்சகங்கள் சாராத, அரசிதழ் பதிவு பெறாத மத்திய அரசு ஊழியர்கள், அதாவது, மின் சாதனங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை இயக்கும் ஊழியர்கள் தொடர்ந்து கூடுதல் பணி நேர படி பெறுவார்கள். அவர்களின் பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து அமைச்சகங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேட்டை உறுதி செய்தால்தான் இந்த படி வழங்கப்படும் என்றும், உயர் அதிகாரியின் எழுத்துப்பூர்வமான உத்தரவின்பேரில்தான் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.