

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கவும், மேலும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கவும் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்ந்து 12% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.