ராணுவத்துக்கு நிதி அளிக்கக்கோரி சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மத்திய அரசு விளக்கம்

போலியான செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராணுவத்துக்கு நிதி அளிக்கக்கோரி சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில், இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com