

புதுடெல்லி,
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
* மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள்.
* கொரோனா வைரசை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடுங்கள்.
* செயற்கை சுவாச கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், மருந்துகளை தயாராக வைத்திருங்கள்.
* மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.