போர் பதற்றம்:வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்களை வெளியிட்ட மத்திய அரசு

நேற்று ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குறைந்தளவில் விமான சேவை தொடங்கப்பட்டது.
போர் பதற்றம்:வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்களை வெளியிட்ட மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து திடீர் போர் தொடுத்து உள்ளன. இருநாட்டு படைகளும் ஈரான் மீது ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

இதனால் ஈரானும் ஆவேசமாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் வான்பரப்பு மூடப்பட்டது. விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சுற்றுலா, கல்வி போன்ற பல்வேறு காரங்களுக்காக அங்கு சென்றவர்கள் திரும்பி வர முடியாமல் தவிக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குறைந்தளவில் விமான சேவை தொடங்கப்பட்டது. இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளில் பரிதவிக்கும் மக்களை ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல வெவ்வேறு விமான நிறுவனங்களும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளன. இதனால் அதிகளவில் பயணிகள் இந்தியா திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வளைகுடா பிராந்தியத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com