சிறுமிகளுக்கு இலவச எச்.வி.பி தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டம்

ஒருமுறை செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, எச்.வி.பி வகைகளில் இருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு இலவச எச்.வி.பி தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டம்
Published on

புதுடெல்லி,

கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​கும் ஒரு முக்​கிய முயற்​சி​யாக, 14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய அரசு விரை​வில் தொடங்க உள்​ளது. இதன்​படி கார்​டசில் தடுப்​பூசி இலவச​மாக வழங்​கப்​படும்.

இந்​தத் தன்​னார்​வத் திட்​டம் வரும் வாரங்​களில் நாடு முழு​வதும் செயல்​படுத்​தப்பட உள்​ளது. உயிருக்கு ஆபத்​தான இந்த நோய்க்​கான எதிர்ப்​புச் சக்​தியை அனை​வருக்​கும் சமமாக விரிவுபடுத்​து​வது, பெண்​களைப் பாதிக்​கும் பொது​வான புற்​று​நோய்​களில் ஒன்​றான இதற்கு எதி​ரான இந்​தி​யா​வின் போராட்​டத்தை வலுப்​படுத்​து​வது ஆகிய​வை​தான் இந்த திட்​டத்​தின் நோக்​கம் ஆகும்.

உலகின் 160 நாடுகளில் நடைமுறையில் உள்ள திட்டத்தில் இந்தியாவும் இணைகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com