தமிழ்நாட்டுக்கு ரூ.127½ கோடி நிதி: மத்திய அரசு விடுவித்தது


தமிழ்நாட்டுக்கு ரூ.127½ கோடி நிதி: மத்திய அரசு விடுவித்தது
x

தமிழ்நாட்டுக்கு ரூ.127½ கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு 2025-2026-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியமாக ரூ.127 கோடியே 58 லட்சத்தை விடுவித்து உள்ளது. 2,901 கிராம பஞ்சாயத்துகள், 74 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இந்த நிதி கிடைக்கும்.

இதைப்போல 2024-2025ம் நிதியாண்டில் அசாமுக்கு ரூ.214 கோடியே 54 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதி கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்கல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story