ஜூன் 13-ந்தேதிக்குப் பின்பு "கொரோனா தொற்று சரிவடைந்துவிட்டது" மத்திய அரசு


ஜூன் 13-ந்தேதிக்குப் பின்பு கொரோனா தொற்று சரிவடைந்துவிட்டது மத்திய அரசு
x
தினத்தந்தி 23 July 2025 3:15 AM IST (Updated: 23 July 2025 3:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு சரிவடைந்துவிட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்று, புதிய வைரஸ் உருமாற்றம் காரணமாக கடந்த மே மாதத்தில் மீண்டும் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாநில அரசுகளை எச்சரித்த மத்திய அரசு, கொரோனா பரவலை தீவிரமாக கண்காணித்து வந்தது. புதிய வகை கொரோனா தொற்று, சுகாதார அபாயநிலையை ஏற்படுத்தாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு சரிவடைந்துவிட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த அறிக்கையில் இதுகுறித்து கூறி இருப்பதாவது:-

உலக சுகாதார நிறுவனம், கிழக்கு மத்திய தரைகடல் நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதாக மே 28-ந்தேதி அறிவித்தது. மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க பரிந்துரைக்கப்பட்டன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வகை வைரஸ் உருமாற்றத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா மே மாதம் வேகமெடுத்து ஜூன் 13-ந் தேதி உச்சம் தொட்டிருந்தது. அதன்பிறகு சரிவடைந்துவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story