நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க ராணுவ உதவியை நாடும் மத்திய அரசு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக 13 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க ராணுவ உதவியை நாடும் மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த 3-ந்தேதி நடந்த 'நீட்' தேர்வின் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து டெல்லி, ஜெய்ப்பூர், குருகிராம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க, ராணுவப் படைகளின் உதவியைக் கோர மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. வினாத்தாள்கள் அச்சிடப்படுவது முதல் தேர்வு மையங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுவது வரை முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவ வீரர்களைப் பயன்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிடட்டுள்ளது.

நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com