ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க மத்திய அரசு நடவடிக்கை

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை உயர்த்த மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க மத்திய அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

அரிசி கையிருப்பு

இந்திய உணவுக் கழகத்தின் மத்திய சேமிப்புக் கிடங்குகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 122.64 மில்லியன் டன் உணவுத்தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதில் கோதுமை, சிறுதானியங்கள், நெல் மற்றும் அரிசி ஆகியவை அடங்கும். இந்த அரிசி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு புதிய முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, ரேஷன் அரிசியில் குருணை அளவைக் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 'ஆர்.எம்.டி' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய மந்திரி சபையின் பொருளாதார விவகாரக்குழு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது.

புதிய நடைமுறை

மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகளின்படி, பச்சரிசியில் இதுவரை 25 சதவீதமாக இருந்த குருணை அளவு, இனி 10 சத வீதமாகக் குறைக்கப்படும். புழுங்கல் அரிசியில் இதுவரை 16 சதவீதமாக இருந்த குருணை அளவு, இனி 5 சதவீதமாகக் குறைக்கப்படும். முன்னதாக இந்த திட்டம், ஆந்திராவில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக அங் குள்ள ஆலைகளில் நெல் அரைக்கும்போது கிடைக்கும் உடைந்த அரிசி. அரிசி ஆலைகளிடமே ஒப்படைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆலைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. அங்கு இந்த நடைமுறை வெற்றி பெற்றதால், நாடு முழுவதும் புதிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com