மக்களின் மனநிலையை சோதிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

2034-ஆம் ஆண்டில் இம்மசோதா அமல்படுத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்தது.
மக்களின் மனநிலையை சோதிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

பாட்னா,

இன்று தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது:-

நாங்கள் 33 சதவிதம் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் ஆதரவாளர்கள் அல்ல மாறாக, 50 சதவிதம் இடஒதுக்கீட்டையே ஆதரிக்கிறோம். லாலு பிரசாத் உட்பட அனைத்து சோசலிச தலைவர்களின் நீண்டகால கோரிக்கை இதுவே மகளிர் இடஒதுக்கீட்டிற்குள், பட்டியல் சாதி/பழங்குடியினர் (SC/ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை (OBC) சேர்ந்த பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், அப்போதுதான் அது உண்மையான நீதியாக அமையும்.

2023-ஆம் ஆண்டில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு, 2034-ஆம் ஆண்டில் இம்மசோதா அமல்படுத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இம்மசோதா தொடர்பான அறிக்கையை எதுவும் வெளியிடவில்லை. தற்போது, மீண்டும்​மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டு, தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளவும், அரசியலமைப்பை மாற்றியமைக்கவும், ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவரவும் பாஜக முயன்று வருவதாகவும்.

கூட்டாட்சி அமைப்பை வலுவிழக்க செய்யவும் பாஜக சாமர்த்தியமாக முயல்கிறது. இதுமட்டுமின்றி, இத்தகைய வெளித்தோற்ற நடவடிக்கைகளின் வாயிலாக, அவர்கள் அவ்வப்போது பொதுமக்களின் மனநிலையை சோதித்து பார்க்கின்றனர் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com