

புதுடெல்லி,
2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் வேலைவாய்ப்புகள் குறித்த பெரிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, தனது டுவிட்டரில், எனது கேள்விகளை கண்டு நிதி-மந்திரி பயப்படவேண்டாம். நாட்டின் இளைஞர்கள் சார்பாக நான் கேள்விகளை கேட்டுள்ளேன். இதற்கு பதிலளிப்பது உங்கள் பொறுப்பு. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது அவசியம். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை. இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வேண்டும், ஆனால் அதில், உங்கள் அரசு மோசமாக தோல்வி அடைந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.