மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

மதுரையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரான வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 12 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரான வேலு ஆசானுக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com