

புதுடெல்லி,
இந்தியாவில் மின்சார உற்பத்தியில் அனல்மின் நிலையங்களின் பங்கு கணிசமான அளவில் உள்ளது. இந்த சூழலில் தற்போது நாடு முழுவதும் அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் அலகுகளில் தற்போதைய நிலக்கரி கையிருப்பு 7.3 மெட்ரிக் டன் அளவாக உள்ளது. சுமார் 100 ஆலைகளில் ஒருவாரத்திற்கு குறைவான இருப்பு மட்டுமே உள்ளது.
இந்நிலையில் அனல்மின் நிலையங்கள் நிலக்கரி இருப்பு வைப்பதற்கான கால வரம்புகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்கள் இணைந்து மாதாந்திர நிலக்கரி விநியோகத்திற்கான வரைவு அறிக்கையை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. மாதத்திற்கு 40 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு வைக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.