அலகாபாத் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் பெயரை மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அலகாபாத் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
Published on

உலகப் புகழ் பெற்ற கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஜனவரி 15-ல் தொடங்க உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து அலகாபாத் நகரின் பெயரை அம்மாநில அரசு பிரயாக்ராஜ் என மாற்றம் செய்தது. இதுதொடர்பாக விமர்சனங்களும் வெளியானது. இப்போது பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள 25 நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும் மேற்கு வங்காளத்தின் பெயரை பெங்கால் என பெயர் மாற்றம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இவ்விவகாரம் நிலுவையில் உள்ளது. அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக உள்துறை அமைச்சகம் ஒப்புதலை வழங்கியுள்ளது. இதேபோன்று உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தை அயோத்தியா என பெயர் மாற்றம் செய்வதற்கான பரிந்துரை மாநில அரசிடம் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com