அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதி..!! - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதியை உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய பள்ளி கல்வித்துறை அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், நிதி ஆயோக் ஆகியவை இணைந்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் துப்புரவு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

ஆகவே, அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கூடிய கை கழுவும் வசதி இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் வசதி இருக்க வேண்டும். 'ஜல்ஜீவன்' திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் குடிநீர் குழாய் இணைப்பு பொருத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். சாலார் மின்வசதி உருவாக்கப்பட வேண்டும். கழிப்பறை இருப்பது அவசியம்.

இவற்றுக்கு தேவையான நிதியை 15-வது நிதிக்குழு சிபாரிசுப்படி மத்திய அரசு விடுவித்த நிதியில் இருந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com