கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு

கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods
கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ள கேரளாவில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது. ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து பெய்து வந்த பேய்மழையும், 80-க்கும் மேற்பட்ட அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரும், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவும் மாநிலத்தின் 14 மாவட்டங்களையும் மொத்தமாக நிலைகுலைய செய்திருக்கிறது. கனமழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த நிலையில், கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் எனவும், கேரள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 17,343 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com