

புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எப்போதும் பேசி வருகிறது. புதிய வேளாண் மசோதாக்களை திரும்பபெறும் கோரிக்கையை தவிர வேறு பிற சாத்தியகூறுகள் குறித்து விவாதிக்க விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது.
மத்திய பிரதேச பா.ஜ.க. அரசில் நிலையற்ற தன்மை எதுவும் இல்லை. மத்திய பிரதேச அரசு கொரோனா சூழ்நிலையை சரியாக கையாளுகிறது. முதல்வர் சவுகான் மாற்றப்படுவார் என்று வெளியாகும் தகவல் உண்மை அல்ல. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. எனவே, முதல்வர் யார் என்பதை பா.ஜ.க.வே தீர்மானிக்கும். பாஜக முதல்வர் பற்றி பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை.
எண்ணெயில் கலப்படம் செய்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதால் கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த முடிவு விவசாயிகளுக்கு பயனளிக்கும். சமையல் எண்ணெய்களின் விலைகள் குறித்து அரசாங்கம் கவனித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.