நிர்பயா நிதி மூலம் மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி வழங்கப்பட்டுள்ளது - மத்திய மந்திரி தகவல்

நிர்பயா நிதி மூலம் மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தகவல் தெரிவித்துள்ளார்.
நிர்பயா நிதி மூலம் மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி வழங்கப்பட்டுள்ளது - மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

நிர்பயா நிதி மாநிலங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது, இதில் எவ்வளவு தொகையை மாநிலங்கள் செலவிட்டுள்ள என்ற கேள்விக்கு மக்களவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.3,024.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் ரூ.1,919.11 கோடியைச் செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக டெல்லி மாநிலத்துக்கு மட்டும் ரூ.409.03 கோடி விடுவிக்கப்பட்டது. அதில், ரூ.352.58 கோடி செலவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.324.98 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், ரூ.216.75 கோடி செலவிட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.303.06 கோடி விடுவிக்கப்பட்டதில் ரூ.265.55 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டும் 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.97 கோடியாகும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 3,056 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கு 1,452 கருவிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு 1,187 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com