‘அயோத்தியின் பெருமையை மீட்டெடுப்போம்’ யோகி ஆதித்யநாத் உறுதி

அயோத்தியின் பெருமையை மீட்டெடுப்போம் என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
‘அயோத்தியின் பெருமையை மீட்டெடுப்போம்’ யோகி ஆதித்யநாத் உறுதி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியின் ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சிப்பணிகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டம், லக்னோவில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அயோத்தியின் பண்டைய பெருமைகளை மீட்டெடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன. இதற்காக பெரிய அளவிலான வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றன என கூறினார்.

அயோத்தி வருவோருக்கு சிறந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். குடிநீர்வசதி, சாலையின் இருபுறமும் கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடங்கள், பெரிய பஸ் நிலையங்கள் போன்ற பொதுவான வசதிகளும் தேவை என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com