ரோஹிங்யா அகதிகள் விவகாரம் மத்திய அரசு திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல்

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்கிறது.
ரோஹிங்யா அகதிகள் விவகாரம் மத்திய அரசு திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல்
Published on

புதுடெல்லி,

மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.

மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40,000 ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் அரசுடன் பேச தொடங்கியது.

இந்நிலையில் மியான்மரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் 3 லட்சம் பேர் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை அகதிகள் தரப்பில் எதிர்க்கப்பட்டு உள்ளது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடங்கி உள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க கேட்டுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது. நாங்கள் பயங்கரவாதிகள் கிடையாது என ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தரப்பில் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு திங்களன்று (விசாரணைக்கு வரும் நாள் அன்று) சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்படும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com