

புதுடெல்லி,
டெல்லி அரசின் அதிகாரங்களை குறைத்து, துணை நிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிவாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது;
எந்தவொரு நிவாக நடவடிக்கை தொடாபாக முடிவு எடுக்கும் முன்னா, அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை டெல்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாநிலங்களவையிலும் மேற்கூறிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.