பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வராலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் பொதுசெயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

பிரியங்கா காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- 2013-ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 101 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் ரூ.66-க்கும் டீசல் ரூ.51 க்கும் நாட்டு மக்களுக்கு கிடைத்தது. அப்போது, பெட்ரோலில் 9 ரூபாயும் டீசலில் 3 ரூபாயும் மட்டுமே மத்திய அரசு வசூலித்தது. தற்போது பாஜக அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோலில் 33 ரூபாயும் டீசலில் 32 ரூபாயும் வரியாக வசூலிக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 12 முறை பாஜக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 19 டாலராக இருந்தது. ஆனால், இதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இன்றும் கூட சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 2013-ல் இருந்ததை விட குறைவாக உள்ளது. ஆனால் நடப்பு ஆண்டு 50 க்கும் மேற்பட்ட முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 21.5 லட்சம் கோடி ரூபாயை பெட்ரோலிய பொருட்களில் இருந்து வரியாக வசூலித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில், உங்களில் நிதி நிலைமை சரியாக இல்லாத சூழலிலும், அரசாங்கம் 4 லட்சம் கோடி ரூபாயை பெட்ரோல் டீசலில் இருந்து வரியாக வசூலித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியையும் அதன் விலையேற்றத்தையும் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கான வழிமுறையாக இந்த அரசு ஏன் கையாள்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com