

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துவது தவிர தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45-60 வயது பிரிவினருக்கு தடுப்பூசி முன்னுரிமை அளித்து போடப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மூன்றாவது அலை குறித்த அச்சம் எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளா, மராட்டியம், கர்நாடகா, தமிழகம், ஒடிசா, மிசோரம், மேகலாயா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரிப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.