மின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் சாவு

விராஜ்பேட்டையில் மின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் சாவு
Published on

குடகு-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மின்வாரிய அலுவலகத்தில் (செஸ்காம்) ஊழியராக பணியாற்றி வந்தவர் பசவராஜா அப்பண்ணா (வயது 28). இவரது சொந்த ஊர் பாகல்கோட்டை மாவட்டம் ஆகும். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் விராஜ்பேட்டை தாலுகா பி.ஷெட்டிகேரி அருகே குடந்தை கிராமத்தில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் பசவராஜா மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விராஜ்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பசவராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை பிறந்த 3 மாதத்திலேயே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com