அடுத்த 2 மாதங்களில் வழக்கமான ரெயில் சேவை தொடங்க வாய்ப்பு - ரெயில்வே அதிகாரி விளக்கம்

கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரெயில் சேவை அடுத்த 2 மாதங்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 2 மாதங்களில் வழக்கமான ரெயில் சேவை தொடங்க வாய்ப்பு - ரெயில்வே அதிகாரி விளக்கம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் கடைசியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் ரெயில் சேவையும் முடங்கியது. பின்னர் மே மாதம் முதல் படிப்படியாக ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சிறப்பு ரெயில்களாக பல ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அப்படி சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டாலும் தற்போதைய நிலையில் வெறும் 66 சதவீத ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 77 சதவீத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ்கள், 91 சதவீத புறநகர் ரெயில்கள், 20 சதவீத பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரெயில் சேவை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் இந்த சேவை அடுத்த 2 மாதங்களில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த 2 மாதங்களில், சிறப்பு ரெயில்களுடன் கொரோனாவுக்கு முந்தைய சேவைகள் தொடங்கும். எனினும் இது மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் கொரோனா பரவல் நிலையை பொறுத்தது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com