வீடியோ வெளியான விவகாரம்: சண்டிகர் பல்கலைக்கழத்தை செப். 24 வரை மூட உத்தரவு

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து செப்டம்பர் 24-ந் தேதி வரை விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிரவாகம் அறிவித்துள்ளது.
வீடியோ வெளியான விவகாரம்: சண்டிகர் பல்கலைக்கழத்தை செப். 24 வரை மூட உத்தரவு
Published on

மொகாலி,

சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் அங்கு பயிலும் மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது.

ஆனால், எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரே இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்திலும் கசிய விட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்தே மாணவர்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் பரவியாதாக கூறப்படுகிறது.

இந்த தகவலால் பெற்றோர்களும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தாங்கள் குளிக்கும் வீடியோ வெளியானதால் மன உளைச்சலில் 7 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் பரவி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசாரும் மறுத்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 24-ந் தேதி வரை விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிரவாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com