நிலவில் உறைபனி இருப்பதை உறுதி செய்த சந்திரயான்-3 விண்கலம் - இஸ்ரோ தகவல்


நிலவில் உறைபனி இருப்பதை உறுதி செய்த சந்திரயான்-3 விண்கலம் - இஸ்ரோ தகவல்
x

நிலவில் உறைபனி இருப்பதை சந்திரயான்-3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி பெங்களூருவில் இருந்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் (இஸ்ரோ) ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியது. நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவ சக்தி' என்று பெயரிடப்பட்டது.

இந்த விண்கலம் மூலம் நிலவின் மேற்பரப்பு குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பின் அடிப்பகுதியில், உறைபனி இருப்பதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் முன்பு கணிக்கப்பட்டதை விட, நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் அதிக இடங்களில் பனிக்கட்டி இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பனியின் உருவாக்கத்தை நேரடியாகப் பாதிக்கலாம் என்றும், இது குறித்து மேலும் ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் உறைபனி ஏற்பட்ட காரணத்தை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story