சரித்திரம் படைக்க தயாராகும் சந்திரயான்-2: தயார் நிலையில் இஸ்ரோ மையம்

சரித்திரம் படைக்க சந்திரயான்-2 தயாராகி வருகிறது. இதற்காக இஸ்ரோ மையம் தயார் நிலையில் உள்ளது.
சரித்திரம் படைக்க தயாராகும் சந்திரயான்-2: தயார் நிலையில் இஸ்ரோ மையம்
Published on

பெங்களூரு,

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, 'சந்திரயான்-2' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ஜூலை 22ல் விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையை படிப்படியாக கடந்து, பின் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. லேண்டர் சாதனத்தை, நிலவில் தரை இறக்குவதற்கான முயற்சிகள் நாளை (சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணி வரை மேற்கொள்ளப்படுகின்றன.

விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் பணி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான செயல்பாடுகளில் இஸ்ரோ மையம் தயார் நிலையில் உள்ளது. நிலவின் தென்துருவத்தின் சிம்பிலியஸ்-எஸ் என்ற பகுதியில் விக்ரம் தரையிறங்குகிறது. நாளை அதிகாலை 5.30 மணிக்கு விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வை தொடங்கும்.

'சந்திரயான்-2' விண்கலம் நிலவில் தரையிறங்குவதை காண, நாட்டு மக்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனால் #Chandrayaan2Live' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடமும், உலக அளவில் 2ம் இடமும் பிடித்தது. #Chandrayan2' என்ற ஹேஷ்டேக் உலக அளவில், டிரெண்டிங்கில் 4வது இடம் பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com