சந்திரயான்-3 திட்டத்தில் பீதர் சகோதரர்களின் பங்களிப்பு

சந்திரயான் -௩ திட்டத்தில் பீதர் சகோதரர்களின் பங்களிப்பு இருப்பதை அவர்களது கிராம மக்கள் கொண்டாடினர்.
சந்திரயான்-3 திட்டத்தில் பீதர் சகோதரர்களின் பங்களிப்பு
Published on

பீதர்:

உலகையே திரும்பிபார்க்க வைத்த இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், ஊழியர்களின் பங்களிப்பும் உள்ளது. இந்த திட்டத்தில் கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரவி பி.கவுடா, பெலகாவியை சேர்ந்த அபிஷேக் தேஷ்பாண்டே ஆகியோர் பணியாற்றி கர்நாடகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அந்த வரிசையில் கர்நாடக மாநிலம் பீதரை சேர்ந்த சகோதரர்களும் இணைந்துள்ளனர்.

பீதர் மாவட்டம் அவுராத் தாலுகா வடகாவன் கிராமத்தை சேர்ந்த ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் தொழில்நுட்ப ஊழியராக பிரபு கோண்டா பணியாற்றி வருகிறார். நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுப்பணி மேற்கொள்ளும் சந்திரயான்-3 விண்கலத்துக்கு தேவையான திரவ ஹட்ரஜனை இவர் தான் நிரப்பியுள்ளார்.

அதுபோல் இவரது சகோதரர் சுதாகர் கோண்டா பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் தொழில்நுட்ப பிரிவில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்த இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து தான் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிப்பது, லேண்டரில் இருந்து ரோவர் பிரிப்பு, மற்றும் கட்டளையிடும் பணிகள் நடைபெற்றதுடன், நிலவை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பிரபு கோண்டா, சுதாகர் கோண்டா ஆகியோர் சந்திரயான்-3 திட்ட வெற்றி பங்களிப்பில் இடம்பெற்றுள்ளனர். இதனால் வடகாவன் கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சொந்த ஊருக்கு வந்த அவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com