நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திரயான்-2

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திரயான்-2
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, கடந்த புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 14) பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவைச் சென்றடையும். பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வரும். அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com