ஹங்கேரியில் ஆட்சி மாற்றம்: பிரதமர் மோடியின் வாழ்த்து

டிஸ்ஸா கட்சிக்கு (Tisza Party) கிடைத்திருக்கும் மகத்தான தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹங்கேரியில் ஆட்சி மாற்றம்: பிரதமர் மோடியின் வாழ்த்து
Published on

ஏப்ரல் 2026-ல் ஹங்கேரியில் நடைபெற்ற தேர்தலில் பீட்டர் மக்யார் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஹங்கேரியின் நீண்டகால பிரதமர் விக்டர் ஆர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி இந்த 2026 நாடாளுமன்ற தேர்தலில் முடிவுக்கு வந்துள்ளது.

புது டெல்லி,

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பீட்டர் மாக்யார் அவர்களுக்கும், டிஸ்ஸா கட்சிக்கும் (Tisza Party) கிடைத்திருக்கும் மகத்தான தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவும் ஹங்கேரியும் ஆழமான நட்பு, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் நீடித்த பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன.

நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் கூட்டு வளம் மற்றும் நல்வாழ்வுக்காக, மிக முக்கியமான இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் (India-EU) இடையிலான நீண்டகால ஒத்துழைப்பு முன்னெடுத்து செல்லவும், உங்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com