

சண்டிகர்,
பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், தமது கடைசி காலத்தில் அப்பகுதியில்தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படு கிறது. அவரது நினைவாக தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாகும்.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கர்தார்பூர் வழித்தடம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட உள்ளதை பஞ்சாப் முதல் மந்திரி சரண் ஜித் சிங் சன்னி வரவேற்றுள்ளார். மேலும் தனது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள மந்திரிகள் வரும் 18 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள புனித தலத்திற்கு செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டார்.