'சார் தாம்' யாத்திரையின் போது மாரடைப்பால் 2 பக்தர்கள் உயிரிழப்பு

'சார் தாம்' யாத்திரையின் போது மாரடைப்பால் 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரை பயணம் அட்சய திருதியையை முன்னிட்டு சனிக்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரியில் சார் தாம் யாத்திரையின் போது இருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாத்திரைக்குச் செல்வதற்கு முன் யாத்ரீகர்கள் அவர்களின் உடல்நிலையை முழுமையாகப் பரிசோதிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட யாத்ரீகர்கள் முழுமையான சுகாதார பரிசோதனை செய்து சுகாதார பரிசோதனை படிவத்தை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், யாத்ரீகர்கள் அரசு வழங்கிய அறிவுரைக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அலட்சியத்தால், யமுனோத்ரியில் மாரடைப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com