அல் கொய்தா இயக்க தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் ஜீஷன் அலி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அல் கொய்தா இயக்க தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் ஜீஷன் அலி மீது டெல்லி போலீசார் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #terrorist
அல் கொய்தா இயக்க தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் ஜீஷன் அலி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

புதுடெல்லி,

அல் கொய்தா இயக்க தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் ஜீஷன் அலி, இந்திய இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கும் வகையில் தூண்டிடும் பேச்சுகளை பேசியது மற்றும் தீவிரவாத இயக்கத்திற்கு தளத்தினை அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த வருடம் ஆகஸ்டில் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு அவர் நாடு கடத்தப்பட்டார். இதுவரை இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் முகமது ஆசிப், ஜாபர் மசூத், முகமது அப்துல் ரெஹ்மான் மற்றும் அப்துல் சமி ஆகிய 4 பேர் மற்றும் சையத் அன்ஜர் ஷா ஆகியோர் அலியின் பெயரை வெளியிட்டனர்.

கடந்த 2015ம் ஆண்டில் இந்திய துணை கண்டத்தில் அமைந்த அல் கொய்தா இயக்கத்தினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் ஒரு வருடம் கடந்த நிலையில், டெல்லி சிறப்பு படை போலீசார் அலியை கைது செய்தனர்.

இந்த வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதி சித்தார்த் சர்மா வருகிற பிப்ரவரி 2ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

#terrorist #delhi #SaudiArabia

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com