உக்ரைன்-இந்தியா இடையே சிறப்பு விமானங்கள் - இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை

உக்ரைன்-இந்தியா இடையே சிறப்பு விமானாங்கள் இயக்கத்தை அதிகரிக்கலாம் என இந்திய விமான நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
உக்ரைன்-இந்தியா இடையே சிறப்பு விமானங்கள் - இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை
Published on

புதுடெல்லி,

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறினாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை நம்ப மறுக்கின்றன. மேலும் போர் பதற்றம் காரணமாக, உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அமெரிக்க அரசு திரும்ப அழைத்துக் கொண்டது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களி படித்து வரும் இந்திய மாணவர்கள் மற்றும் அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் உக்ரைன்-இந்தியா இடையே சிறப்பு விமானாங்கள் இயக்கத்தை அதிகரிக்கலாம் என இந்திய விமான நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைனில் இருந்து வரும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com