சாட் ஜி.பி.டி. மூலம் தற்கொலைக்கு வழி தேடிய கல்லூரி மாணவிகள்: எலான் மஸ்க் அதிர்ச்சி

மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதற்கான வழிகள் குறித்து இணையதளத்தில் தேடியதை போலீசார் கண்டறிந்தனர்
சாட் ஜி.பி.டி. மூலம் தற்கொலைக்கு வழி தேடிய கல்லூரி மாணவிகள்: எலான் மஸ்க் அதிர்ச்சி
Published on

சூரத்,

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சோ்ர்ந்த மாணவிகள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கல்லூரிக்கு சென்றனர். மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த குடும்பத்தினார், காணாமல் போன தங்கள் பிள்ளைகளை அவர்களது பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், இறுதியில் காவல் நிலையம் சென்று அவர்கள் காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். புகார் கிடைத்த உடனே காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.

போலீசார் அவர்களின் தொலைபேசிகளைக் தீவிரமாக கண்காணித்தபோது,​சூரத்தில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு அவர்கள் சென்றது தெரிய வந்தது, உடனே போலீசார் கோவிலுக்கு சென்று பார்த்த போது காணாமல் போன பெண்களில் ஒருவருக்கு சொந்தமான ஸ்கூட்டர் கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவிலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைவது தெரிந்தது. இந்த நிலையில் அவர்களின் உடல்கள் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டன. உடல்களுக்கு அருகில் மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் சிரிஞ்ச்சுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆணையர் என்.பி. கோஹில் கூறுகையில், அந்த இளம் பெண்கள் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்களில் ஒருவர் முதலாமாண்டு வணிகவியல் மாணவி, மற்றவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நாங்கள் அவர்களின் தொலைபேசிகளைத் ஆய்வு செய்த போது,சாட் ஜி.பி.டியில் தற்கொலைக்கு எந்த மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் தேடி உள்ளனர். அவர்களின் தொலைபேசியில் ஒரு பெண் மயக்க மருந்தை செலுத்தி தற்கொலை செய்து கொள்ளும் ஸ்கிரீன்ஷாட் இருந்தது என்று காவல்துறை அதிகாரி கூறினார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கல்லூரி மாணவிகள் இருவர் சாட் ஜி.பி.டி. மூலம் தற்கொலைக்கு வழி தேடிய சம்பவம் குறித்து எலான் மஸ்க் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், தற்கொலை கேள்விகளுக்கு ஏ.ஐ முலம் உருவாக்கப்பட்ட தளத்தை பெண்கள் பயன்படுத்துவது குறித்த பதிவிற்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த மஸ்க், "ஐயோ கொடுமை" என்று எழுதினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com