சத்தீஷ்கார்: நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை

கடந்த ஆண்டு நடந்த நடவடிக்கையில், 214 நக்சலைட்டு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.

சத்தீஷ்கார்:  நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி மே வரை ஆபரேசன் பிளாக் பாரஸ்ட் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் அடங்கிய குழு ஒன்று நேற்றிரவு கர்ரேகுட்டலு மலை பகுதியருகே ஆபரேசன் பிளாக் பாரஸ்ட் 2 என்ற தீவிர தேடுதல் வேட்டைக்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Also Read
துணிகளை துவைத்து, கழிவறையை சுத்தம் செய்ய வைத்து விட்டனர்; பாகிஸ்தான் வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

சத்தீஷ்கார்:  நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை

கடந்த ஆண்டு நடந்த நடவடிக்கையில், ரூ.1.72 கோடி மதிப்பில் பரிசு தொகை அறிவிக்கப்பட்ட 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். எனினும், இதன்பின்னர் பலர் ஆயுதங்களை போட்டு விட்டு போலீசார் முன் சரணடைந்தனர்.

அப்போது, 214 நக்சலைட்டு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 12 ஆயிரம் கிலோ உணவு வினியோக பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com