துணிகளை துவைத்து, கழிவறையை சுத்தம் செய்ய வைத்து விட்டனர்; பாகிஸ்தான் வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கான கட்டண பாக்கியை கூட பாகிஸ்தான் ஆக்கி கூட்டமைப்பால் கட்ட முடியவில்லை என்று குற்றச்சாட்டாக கூறினார்.
துணிகளை துவைத்து, கழிவறையை சுத்தம் செய்ய வைத்து விட்டனர்; பாகிஸ்தான் வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

லாகூர்,

பாகிஸ்தானின் ஆடவர் ஆக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். இந்நிலையில், ஆடவர் ஆக்கி அணியின் கேப்டன் அம்மத் ஷகீல் பட், அணி நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கி கூட்டமைப்பு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார்.

அவர் லாகூர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எங்களை தேசிய அளவிலான வீரர்களை போன்று நடத்தவில்லை என கூறிய அவர், நாங்கள் சமையலறையில் பாத்திரங்களை கழுவி கொண்டும், எங்களுடைய துணிகளை துவைத்து கொண்டும், கழிவறையை சுத்தம் செய்தும் விட்டு விளையாட செல்ல நேர்ந்தது.

Also Read
ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐ.நா. பொது செயலாளர் இந்தியா வருகை
துணிகளை துவைத்து, கழிவறையை சுத்தம் செய்ய வைத்து விட்டனர்; பாகிஸ்தான் வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

இதன்பின்பு நாங்கள் எப்படி உண்மையில் நன்றாக விளையாட முடியும் என கேள்வி எழுப்பினார். ஆஸ்திரேலியாவில் முறையான தங்கும் வசதியும் இல்லை என குறையாக கூறினார்.

நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கான கட்டண பாக்கியை கூட பாகிஸ்தான் ஆக்கி கூட்டமைப்பால் கட்ட முடியவில்லை என்றும் குற்றச்சாட்டாக கூறினார். நாட்டுக்காக விளையாடிய எங்கள் மீது எப்படி தடை விதிக்க முடியும்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com