மராட்டியம்: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டியம்: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் ஆனந்த் நகர் பகுதியில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் உள்பட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com