தெலுங்கானா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து - 10 பேர் பலி


தெலுங்கானா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து - 10 பேர் பலி
x

மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

1 More update

Next Story