சென்னை கடற்கரை-அரக்கோணம் செல்லும் ரெயிலை திருத்தணி வரை நீட்டிக்க வேண்டும்: எஸ்.ஜெகத்ரட்சன் எம்.பி. மனு

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயிலை திருத்தணி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில்வே வாரிய தலைவரிடம், எஸ்.ஜெகத்ரட்சன் எம்.பி. நேரில் மனு அளித்தார்.
சென்னை கடற்கரை-அரக்கோணம் செல்லும் ரெயிலை திருத்தணி வரை நீட்டிக்க வேண்டும்: எஸ்.ஜெகத்ரட்சன் எம்.பி. மனு
Published on

புதுடெல்லி,

அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், ரெயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது எஸ்.ஜெகத்ரட்சகன் கோரிக்கை மனு ஒன்றையும் அவரிடம் கொடுத்தார்.

ஜெகத்ரட்சகன் எம்.பி. கொடுத்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையில் இயக்கப்படும் மின்சார ரெயிலை (வ.எண்.40903/40904) திருத்தணி வரையிலும் நீட்டிக்க வேண்டும். இந்த ரெயிலை சென்னை-திருத்தணி (வ.எண்.43505) ரெயிலின் முந்தைய கால அட்டவணைக்கு கொண்டுவர வேண்டும். சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே தினசரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கடந்த 2014-15-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அறிவித்தப்படி இதனை இயக்க வேண்டும்.

சென்னை-பெங்களூரு இடையேயான ரெயில் (வ.எண்.22625/22626) வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் நலன் கருதி உங்களிடம் இந்த கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com