சென்னை - பெங்களூரு புல்லட் ரெயில் திட்டத்திற்கான டெண்டர் வெளியீடு

இத்திட்டத்தை வரும் 2035ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு புல்லட் ரெயில் திட்டத்திற்கான டெண்டர் வெளியீடு
Published on

சென்னை,

சென்னையில் இருந்து பெங்களூருக்கு, புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

புல்லட் ரெயில்

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில்,

சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு வரை புல்லட் ரெயில் திட்டப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அதிவேக ரெயில் கழகம் வெளியிட்டுள்ள புதிய டெண்டரின்படி ஒப்பந்ததாரர் இத்திட்டத்தின் திருத்தப்பட்ட, புதிய வழித்தட வரைப்படத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்தம் 306 கி.மீ. துாரம் உடைய இந்த அதிவேக வழித்தடத்தில் சென்னை சென்டிரல், பூந்தமல்லி, அரக்கோணம், ஆந்திர மாநிலம் சித்துார், கர்நாடகா மாநிலம் கோலார், கொடிஹள்ளி, ஒயிட்பீல்டு மற்றும் பெங்களூரு என 8 முக்கிய ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயங்கக் கூடிய இந்த புல்லட் ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரம், ஏழு மணி நேரத்தில் இருந்து 73 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

சென்னையின் முதல் புல்லட் ரெயில் நிலையம், சென்னை புறநகர் ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்படும்.

அது சென்னை சென்ட்ரல் மற்றும் மெட்ரோ நிலையங்களுடன் முறையே 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் நீளமுள்ள இணைப்புகள் வாயிலாக, இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 306 கி.மீ. வழித்தடத்தில் 28 கி.மீ. துாரம் நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை வரும் 2035ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு, ரூ. 18 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com