சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதை: சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல்

சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதை: சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல்
Published on

புதுடெல்லி,

மும்பை-ஆமதாபாத் இடையே அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சென்னை-பெங்களூரு-மைசூரு தடத்தில் அதிவேக ரெயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இதுதொடர்பான மந்திரிசபை குறிப்பு இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும், இப்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com