சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்: மத்திய அரசு அதிகாரிகள் தகவல்

சென்னை-சேலம் 8 வழிச் சாலை உள்பட நாடு முழுவதும் 22 புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்: மத்திய அரசு அதிகாரிகள் தகவல்
Published on

புதுடெல்லி,

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (நாகாய்) நாடு முழுவதும் அதிவிரைவு சாலைகள், பொருளாதார வழித்தடம் மற்றும் பசுமை வழித்தடம் உள்பட 22 புதிய நெடுஞ்சாலைகளை 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அமைக்க திட்டமிட்டு உள்ளது.

இதில் டெல்லி-மும்பை, ஆமதாபாத்-தோலெரா, அம்பாலா-கோட்புட்லி, அமிர்தசரஸ்-ஜாம்நகர் ஆகிய 4 அதிவிரைவு சாலைகளை 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மேலும் 9 பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட சாலைகள் 2024-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் எனவும், மீதமுள்ள சென்னை-சேலம் 8 வழிச்சாலை உள்பட 9 பசுமை வழித்தட சாலைகள் அமைக் கும் பணி 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

2023 மற்றும் 2024-ம் ஆண்டுக்குள் முடிவடைய இருக்கும் திட்டங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் டெண்டர் விடப்பட உள்ளது. இந்த புதிய சாலைகள் சென்னை, பெங்களூரு, விஜயவாடா, விசாகப்பட்டினம், லக்னோ, சூரத், சோலாப்பூர், ராய்ப்பூர், கோரக்பூர், சிலிகுரி மற்றும் கோட்டா ஆகிய நகரங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் அமையும்.

இந்த சாலைகளின் மொத்த நீளம் 7,800 கி.மீ. ஆகும். இதற்காக ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. இந்த முதலீடு சுங்க கட்டணம் மூலம் மீட்கப்படும் என்றும், சுங்க கட்டணத்தை வசூலிக்கும் உரிமை 15 முதல் 20 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்துக்கு ஏலம் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com